செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:03 IST)

மாணவர்கள் எப்படி விபத்துகளை தவிர்ப்பது? கமிஷனர் பேட்டி!

மதுரை மாநகர காவல் அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு  சார்பில், சிந்தாமணி ரிங் ரோடு வேலம்மாள் சந்திப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராவை, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.


மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஒழுக்கத்துடன் செயல்பட்டால் விபத்துகளை தவிர்க்கலாம் என, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறினார். 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 அதிநவீன கேமராக்கள் மூலம் வேலம்மாள் சந்திப்பில் வரும் வாகனங்கள் வாகன எண் முதற்கொண்டு பதிவு செய்யப்படுகிறது.

வேலம்மாள் சந்திப்பில், நடைபெற்ற அதி நவீன கண்காணிப்பு கேமராவை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் துவக்கி வைத்தார்.  மதுரை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார்  "மாநகர போக்குவரத்து காவல் திட்டமிடல் கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், தல்லாகுளம் போக்குவரத்து காவல்உதவி ஆணையர் மாரியப்பன் , மதுரை தெற்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி, கணேஷ்ராம்,  மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

பள்ளி கல்லூரி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் எட்டு அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடீன் லீடர் நிறுவனம், வேலம்மாள் மருத்துவமனை சார்பில்  போக்குவரத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அதிநவீன கண்காணிப்பு கேமரா மூலம் இந்தப் பகுதியில், கடக்கும் வாகனங்கள் பதிவு எண், பயண நேரம், தேதி முதலியவை பதிவு செய்ய முடியும். மேலும், பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை 25 நாள் வரை பாதுகாக்க முடியும். இதன் மூலம் வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து காவல்துறைக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

அதே நவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமராவை திறந்து வைத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மாணவர்களிடம் கூறுகையில்: மாணவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும்.

மேலும், காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் போது உயிர் காக்க உதவும் எனவும்  ""ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என திருக்குறளை மேற்கோல் காட்டி மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் விபத்து ஏற்படாமல் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கலாம் ஆகையால், மாணவர்கள் ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை கூறினார்.