1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2024 (16:26 IST)

சென்னையில் நாளை முதல் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rain
சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த மாதம் வங்க கடலில் உருவான பெஞ்சால் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு தினங்களில் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், டிசம்பர் 18ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் புதுவையில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, சென்னை மக்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Siva