ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (12:05 IST)

ஒன்றாக நாட்டுக் கூத்துக்கு குத்தாட்டம் போட்ட பாலிவுட் கான்கள்! – வைரலாகும் வீடியோ!

Aanant Ambani wedding
அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான ஷாரூக்கான், சல்மான்கான், ஆமீர்கான் ஒன்றாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.



தற்போது பாலிவுட் உலகில் பெரும் விவாதமாக மாறியிருப்பது அம்பானி வீட்டு திருமணம்தான். ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகள், வைபவங்கள் என அம்பானி வீடே கொண்டாட்டத்தில் இருந்து வருகிறது.

இந்த முன் திருமண நிகழ்வுக்கு இந்திய நடிகர், நடிகையர் மட்டுமல்லாது உலக அளவில் பிரபலமான நடிகர், நடிகைகள், பாப் பாடகர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொள்கின்றனர்.


இந்த முன் திருமண நிகழ்வில் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான ஷாரூக்கான், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோர் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானி திருமணம் ஜூலை 12ல் தான் நடக்க உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகள்தான் இது. இதற்கே ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம். திருமணம் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K