ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (18:42 IST)

தென்னிந்திய நடிகர்களில் இவர்களை மிகவும் பிடிக்கும்- முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் முகமது ஷமி. இவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சிறந்த பந்து வீச்சாளராகவும், எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்கிறார்.
 
உத்தரப்பிரதேசம் மா நிலத்தைச் சேர்ந்த இவரை,  கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய பீரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்வாகம்  ஏலத்தில் எடுத்தது. அப்போது இந்த அணியின் பாக்., முன்னாள் பவுலர் வசீம் அக்ரம் இருந்தார். அவரிடம் இருந்து பந்து வீச்சு நுட்பங்களை கற்றார். அதன்பின்னர், 2012 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.
 
அதன்பின்னர், இந்திய அணியில் இடம்பெற்ற இவர் சிறப்பாக விளையாடி பந்து வீசி வருவதுடன் விக்கெட்டுகள் குவிந்து வருகிறார்.
 
64 டெஸ்ட்டில் விளையாடி 229 விக்கெட்டும், 101 ஒரு நாள் தொடரில் விளையாடி 195 விக்கெட்டும் 23 டி 20 போட்டியில் விளையாடி 24 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில், தென்னிந்திய  நடிகர்களில் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார் என்று முகமது ஷமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு அவர், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரபாஸை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.