1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (17:04 IST)

காதலரை கரம்பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh-Jackky Bhagnan
முன்னணி நடிகை ரகுல் பீரித்தி சிங் இன்று தன் காதலரும் நடிகருமான ஜக்கி பக்னானியைத் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கில்லி மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் கெரடம், தடையறத் தக்க, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ், துருவா,  ஸ்பைடர், தீரன் அதிகாரம்  ஒன்று, ரன்வே, டாக்டர் ஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
 
இந்த   நிலையில், ரகுல் பிரீத் சிங் தனது காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், ரகுல் பீரித்தி சிங் இன்று தன் காதலரும் நடிகருமான ஜக்கி பக்னானியைத் திருமணம் செய்து கொண்டார்.
 
சீக்கிய மற்றும் இந்து முறைப்படி இரு குடும்பத்தினர் முன்னிலையில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் பசுமைத் திருமணம் நடைபெற்றது.
 
இதனைத்தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பில் சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.