Daily Horoscope
✕

தாமரையை நோக்கி நகரும் சூரியன்!. .இது நடந்தா நிரந்தர தோல்விதான்!.. புளூசட்டமாறன் பதிவு!..

Updated: திங்கள், 10 ஆகஸ்ட் 2026 (11:31 IST)
தவெகவை காலி செய்வதற்காக பாஜகவை ஆதரிக்கும் மனநிலைக்கு திமுக வந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிக்காமல் வாக்களிப்பை திமுக புறக்கணிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்டமாறன் ‘தாமரையை நோக்கி நகரும் சூரியன்? தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு வாக்கு அளிக்காமல்.. வாக்களிப்பை திமுக புறக்கணிக்கும். இதனால் அந்த மசோதா நிறைவேறும் என தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன. இது நடந்தால்.. திமுக நிரந்தர தேர்தல் தோல்விகளை சந்திக்கும். 'இந்த ஸ்டாலின் உள்ளவரை..' என‌ பேசிய வசனங்கள் வீணாகும்.

பாஜகவின் வலதுசாரி இந்துத்வா அரசியலுக்கு எதிரான கேடயமாக திமுக இருக்குமென நம்பி வரும் மக்கள் இனி உங்களை கைவிட்டு விடுவார்கள். விஜய் ஆட்சியை வீழ்த்த பாஜகவுடன் கைகோர்க்க நினைப்பது.. திமுகவை மொத்தமாக அழித்து விடும்.

மசோதாவிற்கு எதிராக...புறக்கணிப்பு நாடகம் போடாமல்.. எதிர்த்து வாக்களிப்பீர்கள் என நம்பலாம். இல்லாவிட்டால் பெரியாரும், அண்ணாவும் உங்கள் தலைவர்கள் என சொல்வதை நிறுத்தி விடுங்கள். பாஜகவுடன் எந்த காலத்திலும் திமுக நேரடி அல்லது மறைமுக கூட்டணி வைக்காது என‌ மீடியா முன்பு சொல்லும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இன்று உண்டா? இல்லாவிட்டால்... அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை எனும் பச்சோந்தி பழமொழியை கூறி. பாஜகவுடன் ஜோடி சேருங்கள். சூரியன் அஸ்தமிக்கட்டும்’ என பதிவிட்டிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments