1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. bluesatta maran sharing pradeep ranganathan post

தனுஷுக்கு அடுத்து பிரதீப் ரங்கநாதன்!. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!.. புளூசட்ட மாறன் நக்கல்..

pradeep
திரைத்துறையில் நடிகராக இருந்து ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கி இரண்டு வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இது தமிழ் சினிமா நடிகர்கள் சிலரை உசுப்பி விட்டிருக்கிறது.

குறிப்பாக நடிகர் விஷால் சில நாட்களுக்கு முன்பு நானும் அரசியலுக்கு வருவேன் என கூறினார். ஒருபக்கம் நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு அவர் கண்டிப்பாக எதிர்காலத்தில் அரசியல் வருவார் என்பதை உணர்த்தியது. ‘ என்னுடைய ரசிகர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.. உங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்யுங்கள்.. நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள்.. நாம் இப்படியே இருக்கக்கூடாது’ என்ற அவர் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. ஒருபக்கம் தனது மகன் தனுசை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஆசை கஸ்தூரிராஜாவுக்கும் இருப்பதாக பார்க்கப்படுகிறது..

இந்நிலையில்தான் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் தனது எக்ஸ தளத்தில் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் அவரின் பேட்ச்சை சட்டை பையில் அணிந்து கொண்டு ரத்ததானம் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து ‘இதற்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என பதிவிட்டிருக்கிறார். அதாவது எதிர்காலத்தில் பிரதீப் ரங்கநாதனும் அரசியலுக்கு வரலாம் என்பது போல அவர் நக்கலடித்திருக்கிறார்.



About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
6வது நாளில் மொத்தமாக சரிந்த ஜனநாயகன் வசூல்!.. இவ்ளோதானா?..