புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (15:54 IST)

கறுப்பு பணம் : திமுக, காங்கிரஸில் எத்தனை பேர் ? கணக்கெடுக்கும் மோடி - அமைச்சர் அதிரடி

அக்டோபர் 21 ஆம் தேதி, விக்கிரவாண்டிம் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக , திமுக ஆகிய கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிலையில், அங்கு பிரச்சாரத்தின்பொதுஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளதாவது :
சுவிஸ் வங்கியில் திமுக, காங்கிரஸில் எத்தனை பேருக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்பது பற்றி மோடி கணக்கெடுத்து வருகிறார். ஊழல் செய்த யாரையும் மோடி விட மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்துள்ள இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதின் பணத்தை மீட்டு இந்திய மக்ககளுக்கு  பணத்தை கொடுப்போம் என்ற வாக்குறியை கொடுத்து பாஜக வினர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.