நாங்குநேரியில் பணப்பட்டுவாடா: சிக்கிய அதிமுக, காங்கிரஸ் மாரியப்பன்(ஸ்)!
நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுப்பட்ட அதிமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இரு தொகுதிகளுகும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அம்பலம் பகுதியில் ஒரு வீட்டில் ஓட்டுக்கு கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.
மேலும், திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் இவரதுதான் என உறுதி செய்யப்படாத நிலையில் வழக்கு மட்டும் பதியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில், மேலும் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர் இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதிமுகவின் மாரியப்பனிடம் ரூ.39,000, காங்கிரசை சேர்ந்த மற்றொரு மாரியப்பனிடம் ரூ.31,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.