1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:41 IST)

தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜக கைப்பற்ற முடியாது: வைகோ

vaiko
தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜக கைப்பற்ற முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். 
 
தமிழ்நாட்டை ஆட்சி செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது என்பதும் அதற்காக அண்ணாமலை தலைமையில் பல சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியையும் இந்துத்துவா கொள்கையையும் நிலைநாட்டும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றும் இந்தி, சமஸ்கிருதத்தை வைத்து தமிழ்நாட்டை ஒருபோதும் கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு நிறைவேறாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார் 
 
ஆனால் பாஜக தற்போது சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் நிலையில் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக ஆட்சியை பிடித்துவிடும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்