பேருந்தில் ஒழுகும் நீர்.. தேர்தல் அறிக்கையில் சொல்லவே இல்லையே பாஜக நிர்வாகி கிண்டல்
பேருந்திற்குள் மழைக்காலத்தில் நீர் ஒழுகும் நிலையில், இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் பாஜக பொதுச்செயலாளர் சூரியா சிவா.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 1 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ளார்.
சமீபத்தில், இந்தியாவில் உள்ள கட்சிகள் இலவசத் திட்டங்களுக்குப் பதில் மக்கள் நலத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இலவச திட்டங்கள் மக்களின் தேவைக்கு நிறைவேற்றப்படுவதாகக் கூறி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எங்களுக்கு யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை எனக் கூறினார்.
இந்த நிலையில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, சிவா தனது டுவிட்டர் பக்கத்தில்ல, தமிழக பேருந்தில் மகளிர்களுக்கு இலவச பயணம் மட்டுமல்ல , மழை பெய்தால் இலவச நீர்வீழ்ச்சி வசதியும் உண்டு