திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மார்ச் 2021 (12:09 IST)

பாஜக பெண் பொது செயலாளர் மீது ரசாயன கலர்பொடி வீச்சு! – திரிணாமூல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் பாஜக பெண் பொது செயலாளர் மீது ரசாயன கலர்பொடி தூவப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில்  முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடிகையும், பாஜக பொது செயலாளருமான லாக்கெட் சட்டர்ஜியை சிலர் வழிமறித்து ரசாயன கலர்பொடி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திரினாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ள லாக்கெட் சட்டர்ஜி, தன்னை தாக்கியவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பேட்ஜ் அணிந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.