1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (10:59 IST)

மோடிக்குதான் தாடி வளர்கிறது… தொழில்துறையில் வளர்ச்சி இல்லை! மம்தா ஆவேசம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா தொழில்துறையில் வளர்ச்சி அடையவில்லை என கூறியுள்ளார்.

இந்தியாவில் மேற்கு வங்கம் உள்ளிட்ட  5 மாநிலங்கள் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் ‘இந்தியாவில் தொழில் வளர்ச்சி குறைந்துவிட்டது. ஆனால் மோடியின் தாடி மட்டும் வளர்ந்து வருகிறது. அவர் தன்னை காந்தி, நேரு மற்றும் விவேகானந்தர் ஆகியவர்களை விட மேலானவர்களாக நினைத்துக் கொள்கிறார். அவர் மூளையில் ஏதோ தவறு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.