திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (21:43 IST)

பாஜக பிரமுகர் வெளியிட்ட மம்தாவின் ஆடியோ….அரசியலில் பரபரப்பு

தமிழகத்தைப் போன்று மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் மம்தான் பானர்ஜி ஈடுபட்டபோது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ்க் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,நேற்று  பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா கூறியதாவது:  நாட்டின் வளர்ச்சி நின்றுவிட்டது. அதற்குப் பதிலாக பிரதமர் மோடியில் தாடி மட்டுமே வளர்கிறது. அவர் தன்னைத்தானே விவேகானந்தர் எனக் கூறிக் கொள்கிறார். சில சமயங்களில் அரங்களுக்கு தன் பெயரிடுகிறார் எனத் தெரிவித்திருந்தார். இன்று பிரதமர் மோடியின் விசாவை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில்  நந்திகிராமில் ஒரு பாஜக பிரமுகர் ஒருவர் மம்தான் பானர்ஜி என்னிடம் உதவி கேட்டதாகக் கூறி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் பாஜக துணைத்தலைவர் பிரணாய் லால் என்பவருக்கு மம்தா பானர்ஜி போனில் தொடர்பு கொண்டு தனக்கான வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக மற்றொரு பாஜக நிர்வாகி ஆடியோவை  வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.