திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (23:23 IST)

அதிமுகவை பாஜக அழித்துவிடும் - விசிக தலைவர் திருமா !

தேர்தலுக்குப் பின் அதிமுக கட்சியை பாஜக அழித்துவிடும் என மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

விரையில் தமிழகத்தில்  சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. பிப்ரவரி இறுதி வாரத்தில்  தேர்தல் தேதிஅறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளன் கூறியதாவது:

திமுக கூட்டணியை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்லும்பொறுப்பு நமது அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. இந்தக் கூட்டணியைப் பிரிக்க அதிமுக பாஜக முயற்சி செய்துவருகிறது.

தேர்தலுக்குப் பின் அதிமுக கட்சியை பாஜக அழித்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.