1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:06 IST)

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து எல்.முருகன் கூறிய முக்கிய தகவல்!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் தேமுதிக மற்றும் பாமக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பாஜக-அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளார் 
 
அவருடைய பேட்டியில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது என்று கூறாமல் பாஜக-அதிமுக கூட்டணி என்று பாஜகவை முன்னிலைப்படுத்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது