லயன்ஸ் கிளப்பும், சட்டமன்றமும் ஒன்னுதான்; எதுக்கும் லாயக்கு இல்ல: ஆரம்பிச்சுடாருல எச்.ராஜா!!
லயன்ஸ் கிளபில் சிஏஏவை எதிர்த்து தீர்மானம் கொண்டுவருவது போல தான் சட்டசபையில் கொண்டுவருவதும் என எச்.ராஜா சர்ச்சைக்குள்ளாக பேசியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, லயன்ஸ் கிளப்பிலோ இல்லை வேற ஏதாவது ரெகிரியேஷன் கிளப்பிலோ சிஏஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றினால் அது எப்படியோ அதே மாதிரிதான் சட்டமன்றத்தில் நிரைவேற்றுவதும். கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் நாம் இதனால் என்ன பயன் என்றுதான் கேட்டேன் என சட்டசபையை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
சமீபத்தில் திமுக தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டபோது சபாநாயகர் தனபால் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் திமுக அன்று வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.