அமித் ஷா சென்னை வருகை – திடீ ரத்து !
கூட்டணித் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக இன்று சென்னை வர இருந்த அமித் ஷா வின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை அதிமுக பாமக இடையிலான கூட்டணி இன்று காலை உறுதியானது. அதையடுத்து பாஜக மற்றும் தேமுதிக உடனானக் கூட்டணி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம் பாஜக வின் தேசிய செயலாளரும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியால் நியமிக்கப்பட்டவருமான அமித் ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி இன்று அதிமுக – பாமக- தேமுதிக- பாஜக கூட்டணி இன்று உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் நேற்று பாஜக-சிவசேனா கூட்டணியை உறுதி செய்தது பாஜக. அந்தக் கூட்டணியை உறுதி செய்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரதுப் பயணம் இறுதி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்குப் பதிலாக பாஜக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். அவர் தற்போது தேமுக வுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அதிமுக வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.