1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:54 IST)

கட்சி தாவிய பாஜகவினர்: திமுகவுக்கு பலமா? பலவீனமா?

பாஜகவில் இருந்து திமுகவில் 150 பேர் வந்து இணைந்திருக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
சமீப காலமாகவே நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி மாறுவது அதிகரித்த வண்ணமே உள்ளது. அப்படி கட்சி மாறுபவர்களின் பெரும்பாலானோரின் முதல் தேர்வு திமுகவாக உள்ளது. சமீபத்தில் கூட அமமுகவில் இருந்து பலர் விலகி திமுகவில் இணைந்தனர். 
 
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜகவினர் 150 பேர் திமுகவில் இணைந்தனர். ஆம், நாமக்கல் கிழக்கு மாவட்டம், தமிழ்நாடு சோழிய வேளாளர் முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், பாஜ மாநில அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு முன்னாள் தலைவருமான என்.கே.எஸ். சக்திவேல் தலைமையில் 150 பேர் மற்றும் நாமக்கல் நகரத்தைச் சேர்ந்த டாக்டர் என்.தீபக்குமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
 
இதுபோன்று பல கட்சிகளின் இருந்து வருபவர்களை திமுக ஏற்றுக்கொள்வதால் ஏற்கன்வே கட்சிக்குள் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் குறைந்துக்கொண்டே வருவதாக பேசிக்கொள்ளப்படுகிறது. எனவே திமுக தலைமை இதை சரியாக பேலன்ஸ் செய்யும் நிலையில் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.