புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (12:29 IST)

முகநூலில் சர்ச்சை பதிவு: தமிழக பாஜக பிரமுகர் கைது

சமூக வலைதளங்களில் ஒன்றான முகநூலில் கடந்த சில மாதங்களாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக  பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது புகார்கள் வந்து கொண்டிருந்தன. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று  பாஜக பிரமுகர் கல்யாணராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்
 
சென்னையை சேர்ந்தவர் கல்யாணராமன் தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பகிரங்கமாக பேசக் கூடிய இவர் பல இடங்களில் திராவிட இயக்க சித்தாந்தத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில செயலாளர் சாஹிர்கான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
 
இந்த புகார் மனுவின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று காலை கல்யாணராமன் அகமதாபாத்லிருந்து சென்னை திரும்புவதாக வந்த செய்தியை அடுத்து சென்னை விமான நிலையத்தில் அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.