1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (09:08 IST)

நடுரோட்டில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை! – சென்னையில் அதிர்ச்சி!

crime
சென்னை அயனாவரத்தில் பிரியாணி கடை உரிமையாளர் பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் நாகூர் கனி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாகூர் கனி அயனாவரம் பிரதான சாலையில் கரீம் பிரியாணி என்ற பிரியாணி கடையை நடத்தி வந்துள்ளார். இவர்மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் சில அடிதடி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பிரியாணி செய்து கொண்டிருந்த நாகூர் கனி இடையே ஓய்வாக அருகில் இருந்த ஆட்டோ ஒன்றில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த கும்பல் நாகூர் கனியை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து பட்டாக்கத்தியால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் நாகூர் கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்ட மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் நாகூர் கனி உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்கள் நடமாடும் பகுதியில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K