திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:09 IST)

விரல் ரேகை பதிவாகவில்லை… பழைய முறையில் ரேஷன் பொருள் விநியோகம்!

நியாய விலைக் கடைகளில் பயொமெட்ரிக் முறையில் ரேகை பதிவாவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் எல்லா நியாய விலைக்கடைகளிலும் பயோ மெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் கைரேகை வைத்தால்தான் பொருட்கள் வழங்கப்படும்.

ஆனால் இதில் முதியவர்களின் கைரேகைகள் பதிவாவதில் பல பகுதிகளில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் முதிய உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் அதுபோல இருக்கும் ரேஷன் அட்டைகாரர்களுக்கு பழைய முறையில் உணவுப் பொருட்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.