Daily Horoscope
✕

லஞ்சம் வாங்கிய புகார் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது

Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (13:46 IST)
பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து வருபவர்  கணபதி. இவர், உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார் எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
 
அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினார். மேலும், கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள அவரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
 
முடிவில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணைவேந்தர் கணபதியை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பல்கழைக் கழக துணைவேந்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

அடுத்த கட்டுரையில்
Show comments