திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (21:47 IST)

அமலாபாலின் தைரியத்தை பாராட்டி சல்யூட் வைத்த பிரபல நடிகர்

பிரபல நடிகை அமலாபால் கடந்த 31ஆம் தேதி சென்னை காவல்துறையில் தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது புகார் அளித்தார். இந்நிலையில் அமலாபால் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியான அணுகுமுறையோடு பேசியதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். நடிகைகள் பலர்  பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும், அமலாபால் தைரியமாக போலீஸ் வரை சென்று அந்த தொழிலதிபரை கைது செய்த வைத்தார். தற்போது இது பற்றி பேசியுள்ள நடிகர் விஷால், "பாலியல் தொல்லைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்ததற்காக சல்யூட்" எனக் கூறியுள்ளார்.
 
தீவிர நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்த காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் செய்யும் இவரைப் போன்ற மனிதர்களுக்கு  இது ஒரு பாடமாக இருக்கும் எனவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.