வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (16:46 IST)

கர்ப்பத்தை மறைத்து, பிறந்த குழந்தையை ஷூ பெட்டிக்குள் அடைத்து வைத்த இளம்பெண்...

பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை மறைத்து, பிறந்த குழந்தையை 6 நாட்கள் ஷூ பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
19 வயதான அந்த பெண், தனக்கு பிறந்த குழந்தையை ஷூ பெட்டிக்குள் அடைத்து 6 நாட்கள் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்துள்ளாள். சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் வீட்டில் துற்நாற்றம் ஏற்பட்டதால் அந்த பெண்ணின் தாயார் இது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அந்த இளம்பெண் ஒரு நாள் ரயில் நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் போது இரண்டு மர்ம நபர்கள் தன்னை கடத்தி சென்று கற்பழித்ததாக கூறியுள்ளார். இதனை நம்பி அவளது தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
போலீஸார் மெற்கொண்ட விசாரணையில், இது போல் ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர், அந்த பெண் தனக்கும் வேறு ஒரு நபர் ஒருவருக்கும் தொடர் பாலியல் உறவு இருந்ததாகவும் இதனால்தான் கர்ப்பமானதாவும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.