வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:39 IST)

5 சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த மசோதா சற்று முன்னர் தாக்கல் செய்த நிலையில் தற்போது முடிதிருத்தும் தொழிலாளர்க தங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என போராட்டம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சட்டப்பேரவையில் இன்று வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி உள்ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 5 சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்டு சேலத்தில் கடைகளை அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது