முடிதிருத்தும் தொழிலாளர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்!

Last Updated: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:35 IST)

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவச் சமூகத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் உள் இட ஒதுக்கீடு கேட்டு இன்று போராட்டம் செய்து வருகின்றனர்.

மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடும், சட்டப் பாதுகாப்பும் வழங்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் செய்துள்ளனர். அதனால் இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சமூகத்தி உள்ள 40 லட்சம் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எந்த சலுகைகளும் இல்லாமல் போராடி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :