திருட தெரியாமல் பணத்தை கொளுத்திய கொள்ளையர்கள்! – ராசிபுரத்தில் அதிர்ச்சி!
நாமக்கலில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல எடிஎம் மெஷினை சரியாக திறக்க தெரியாமல் கொளுத்தி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றை இரண்டு பேர் கொண்ட கும்பல் நேற்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். வெல்டிங் மெஷினை கொண்டு ஏடிஎம் மெஷினை திறந்து கொள்ளையடிக்க அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் வெல்டிங் மெஷினின் தீ எடிஎம் எந்திரத்திற்குள் பரவியதால் உள்ளே இருந்த பணம் பற்றி எரிய தொடங்கியுள்ளது.
ஏடிஎம் எந்திரம் எரியத் தொடங்கியதும் பதட்டமடைந்த அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் ஏடிஎம்மில் இருந்த சுமார் 6 லட்ச ரூபாய் பணம் முழுவதும் தீயில் அழிந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.