செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (23:38 IST)

மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது

கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி 2021-  ஆம் ஆண்டிற்ககான விருதாளராக மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதன்(87)  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில் இதழியல் துறையில் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருதும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கபட்டு வருகிறது.

ஜூன் 3 ஆம் தேதி கருணா நிதியின்  பிறந்த நாளை முன்னிட்டு,  கலைஞர் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி 2021 ஆம் ஆண்டிற்கான விருதாளரான மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.