திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (23:07 IST)

ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகம் விருது !

arur dass
ஆரூர்தாஸுக்கு கலைஞர்  நினைவு கலைத்துறை வித்தகம் விருதும் பரிசுத்தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கும்  தேர்வுக் குழுவில்  எஸ்பி.முத்துராமனுடன்,  நாசர், கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விருது வரும் ஜூன் மாதம் கருணா நிதியின் பிறந்த தினமான 3 ஆம் தேதி  முதல்வர் ஸ்டாலின் வழங்க  உள்ளார்.  இவ்விருது இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஆரூர்தாஸுக்கு கலைஞர்  நினைவு கலைத்துறை வித்தகம் விருதும் பரிசுத்தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்த விருது நாளை ஆரூஸ்தாஸுக்கு (90) வழங்கப்படுகிறது. இவர் 1000 சினிமா படங்களுக்கு வசனம் எழுதி, அந்தக் கதாபாத்திரங்களுக்கு பெருமை சேர்த்தார்.  60 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் சாதனையாளராக ஆரூர்தாஸுக்கு (3-06-22) இந்த விருது வழங்கப்படவுள்ளதால் சினிமா துறையினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.