திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (10:25 IST)

அன்னபூர்ணா உணவகத்தை நடத்துபவர்கள் திமுகவிற்கு நெருக்கமானவர்கள்: பாஜக பிரமுகர்

அன்னபூர்ணா உணவகத்தை நடத்தும் சகோதரர்கள் சுந்தரராஜன்-சீனிவாசன் ஆகியோர் திமுகவிற்கு நெருக்கமானவர்கள். திமுகவின் முக்கியஸ்தர்களுடன் வியாபார தொடர்புகளையும் கொண்டவர்கள் என பாஜகவை சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
சில நிலங்களை திமுக முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து வாங்கியதாக தகவல்களும் உண்டு. ஒரு தற்போதைய திமுக அமைச்சர் அவர்களின் குடும்ப நபரும் கூட!!!தங்களுக்கு எந்த கட்சியுடனும் நெருக்கம் இல்லை என அவர்கள் கூறுவது பொய்.
 
ஒரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துள்ள இடத்தில் அர்த்தமற்ற பேச்சுக்களை பேசுகிறார். உயர்தரமான அன்னபூர்ணா உணவு விடுதிக்கு செல்லும் எவரும் வரி குறித்து கேட்கப்போவதில்லை. ஆனாலும், கிறுக்குத்தனமாக ஒவ்வொரு முறை வரும்போதும் சகோதரி வானதி சீனிவாசன்  சண்டை பிடிக்கிறார் என உளறுகிறார். அவர் என்ன சொல்ல வந்தார் என்பது அவருக்கே புரிந்திருக்குமா என தெரியவில்லை. பிறகு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு வந்து சந்திக்கிறார். மன்னிப்பு கேட்கிறார். அது வீடியோ எடுக்கப்படுகிறது. வெளியில் விடப்படுகிறது. செய்தவர் யார்?! கிட்டத்தட்ட அவருக்கு பின்னே நின்றிருந்த யாரோ ஒரு நபர். அப்படியென்றால் அவரே அழைத்து வந்த   நபராக கூட இருக்க முடியும்.
 
திமுகவிற்கு நெருக்கமான நபர்(குடும்பம்) என்பதால் வரும் கேள்வி , தங்களது தவறுகளை அடித்து நொறுக்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை வஞ்சமாக ஏன் திமுக திட்டமிட்டு இப்படி செய்யக்கூடாது?!
 
மெட்ரோ திட்டத்திற்கு 2.5% மெட்ரோ திட்டத்திற்கு பணம் ஏன் தரப்படவில்லை என்பதற்கு ஆதாரபூர்வமாக காரணங்களை அடுக்கியுள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த சூழ்நிலையில் யாரும் சந்தேகப்பட முடியாத பெரிய மனிதராக கோவையில் அறியப்படும் சீனிவாசனை வைத்து திமுக சதி செய்ததாகவே நான் நம்புகிறேன்.
 
Edited by Mahendran