வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (12:07 IST)

பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்; திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
ஆளுநரைப் பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை என்று கூறிய அண்ணாமலை, ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு என்று கூறினார்.
 
ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, ‘பாம்பிடம் சீண்டுவது போல்,  திமுக ஆளுநரிடம் சீண்டினால் அவர் கொத்தத் தான் செய்வார் என்றும் கூறினார்.
 
காவிரி விவாகரத்தை இந்த அளவு முற்றியதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்,.
 
Edited by Mahendran