1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (20:39 IST)

இந்திய தண்டனை சட்டங்களின் பெயர் மாற்றம்: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

karur
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரில்,  இந்திய தண்டனை சட்டங்களின் பெயரை  மாற்றியது பாஜக அரசு.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் கூறிவந்தன. இந்த நிலையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் மூன்றின் பெயரையும் சமஸ்கிருதத்தில் மாற்றியும் சட்டத்தில் உள்ள சரத்துக்களில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துக்களையும் புதிதாக திணித்திருப்பதால், மத்திய அரசின் இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களின் கருத்துக்களை கேட்காமல் அவசரக் கதையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி  நேற்று, இரண்டாம் நாளாக கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு.மாரப்பன் அவர்கள் தலைமையேற்க கூட்டமைப்பின் இணைச்செயலாளர்கள் நவநீதன், AM செந்தில்குமார், கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் பார்த்திபன், பொருளாளர் சம்பத், இணைச் செயலாளர் பாலாஜி காந்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேம் குமார், NP ரமேஷ், ராமநாதன், KP ராஜேந்திரன், செல்வ.நன்மாறன், சக்திவேல், பானுமதி, பரமேஸ்வரி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்