என்கிட்ட ஆடு தான் இருக்கு, ரூ.500 கோடிக்கு எங்கே போவேன்: அண்ணாமலை டுவிட்
பிஜிஆர் என்ற நிறுவனம் ரூபாய் 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தன்னிடம் சில ஆடுகள் மட்டுமே இருப்பதாகவும் 500 கோடி தன்னிடம் இல்லை என்றும் டுவிட்டரில் பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்சாரத் துறையில் நடந்த ஊழல் குறித்து பேசி வருகிறார் என்பதும் இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மின்சார துறையில் நடந்த ஊழலுக்கு பிஜிஆர் என்ற நிறுவனம் உடந்தை என்ற ரீதியில் அண்ணாமலை டுவிட்டை பதிவு செய்ததற்கு இழப்பீடு கேட்டு ரூபாய் 100 கோடி கேட்டு பிஜிஆர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு பதில் அளித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! அறிவாலயம் அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! என்று பதிவு செய்துள்ளார்.