வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (13:32 IST)

திமுகவிற்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் - அண்ணாமலை

பாஜக மீது கை வைத்தால் திமுகவுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது என்பதும் காரசாரமாக இருவரும் மாறி மாறி அறிக்கை விட்டுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பாஜக மீது திமுக கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வர் அவர்கள் ஊழலை அவர் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர்களும் புரிந்துகொண்டு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சரியாக பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம் என்றும் கூறியுள்ளனர் 
 
மேலும் ஒரே ஒரு மாநிலத்தில் அரசியல் செய்பவர்கள் இங்கு வந்து மிரட்டல் விடக்கூடாது என்றும் நாங்கள் 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம் என்றும், டெல்லியில் மோடி உள்ளார்கள் எனவும், காத்திருக்கிறோம் தொட்டு பார்க்கவும் என்றும், ஒரு ஹார்பர் தொகுதியிலிருந்து சேகர்பாபு அரசியல் செய்கிறார் என்றால் 11 கோடி பாஜக உறுப்பினர்கள் அரசியல் செய்ய மாட்டார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்