திமுக கொடுக்கும் ஆக்சிஜனில் பிழப்பு நடத்தும் காங். - அண்ணாமலை விமர்சனம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கொடுக்கும் ஆக்சிஜனிலேயே தமிழக காங்கிரஸ் உயிர் வாழ்கிறது என விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது. இதனை ஒட்ட பெவிகுயிக்கை வாங்கி கொடுக்க பாஜக தயாராக உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஐசியூ-விலேயே உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போக மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி திமுகவுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. திமுக கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 24 எம்.பி.க்களை பாஜக பெறும். இதனை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள். பாஜக எந்த தனிமனிதனையும் நம்பி இல்லை. புதியவர்கள் பலர் இந்த கட்சியில் உருவாவார்கள். அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.