வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (16:05 IST)

நமது அம்மா’ நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு: அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு!

Namathu Amma
நமது அம்மா நாளிதழின் நிர்வாகி வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக சந்திரசேகர் என்பவர் உள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. கோவை வடவள்ளி என்ற பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வனத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது