வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (21:10 IST)

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு: நாளை விசாரணை

ADMK
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நாளை விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளன
 
இரட்டை இலை சின்னத்தை மூடக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரணை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த வழக்கின் முடிவைப் பொறுத்து தான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது