வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (18:15 IST)

ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் கச்சத்தீவை மீட்கலாம்: அண்ணாமலை

Annamalai
முதல் அமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் கச்சத்தீவை மீட்பது பற்றி ஆலோசனை செய்யலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பையும் 
 
நேற்று பிரதமர் மோடி சென்னை வருகை தந்த போது அவரிடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐந்து கோரிக்கைகளை வைத்தார். அதில் ஒன்று கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது
 
இதுகுறித்து ஏற்கனவே தமிழக பாஜக அண்ணாமலை காட்டமான பதில் கூறி வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் 
 
என்னுடைய தந்தை கருணாநிதி கச்சத்தீவு விஷயத்தில் தப்பு செய்துவிட்டார் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்கட்டும் என்றும், மன்னிப்பு கேட்டால் நானே அறிவாலயம் சென்று அவரிடம் பேசுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
 கச்சத்தீவை மீட்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என்றும் நாங்கள் கச்சத்தீவை மீட்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்