1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Arabi kannada movie trailer release today

நடிகராக மாறிய பாஜக அண்ணாமலை! – இன்று வெளியாகிறது ட்ரெய்லர்!

Arabi
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி பின்னர் அதிலிருந்து விலகி விவசாயம் பார்த்தவர் அண்ணாமலை. பின்னர் இவர் தமிழக பாஜகவின் துணை தலைவராகவும், பின்னர் தலைவராகவும் ஆனார். ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணி செய்து வந்தவர் அண்ணாமலை.

இந்நிலையில் கன்னடத்தில் தயாராகியுள்ள “அரபி” என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளாராம் அண்ணாமலை. இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்
க்யூட் தேர்வை ஏற்க மறுக்கும் 22 மத்திய பல்கலைக்கழகங்கள் : சிக்கலில் யுஜிசி