1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 26 மே 2022 (22:20 IST)

முதல்வரின் இன்றைய செயல் அரசியல் நாடகம்: அண்ணாமலை

annamalai
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் இன்றைய செயல் அரசியல் நாடகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
இன்று பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகிய இருவரும் நலத் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டனர் என்று தெரிந்தது
 
பிரதமரை மேடையில் அமர வைத்துவிட்டு முதல்வர் பேசிய பேச்சு அரசியல் நாடகத்தை நடத்தி காட்டி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுக்கிறார் என்றும் கச்சதீவை மீட்க கோரிக்கை வைக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு கிடையாது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்