தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுகள் கூறிய அண்ணாமலை
தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ் நாடு காவல்துறையினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
23 வது தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டி ஜனவரி 9 முதல் 13 வரை செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ் நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச்சுடும் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில், முதலிடம் வென்ற தமிழகக் காவல்துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,
தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் முதல் இடமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடமும் வென்ற தமிழக காவல்துறைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், முதலிடம் வென்ற தமிழக வீரர் ஆர். சதிசிவனேஷிற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதன்முறையாக, மாநில காவல்துறையைச் சேர்ந்த வீரர் இப்போட்டியில் வெல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அணி தேசிய அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.