திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 1 ஜூலை 2024 (18:06 IST)

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

Selvaperandagai
ஒரு வட்டச் செயலாளராக இருப்பதற்கு கூட அண்ணாமலை தகுதி இல்லாதவர் என்றும் அவரை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தார்கள் என்று தெரியவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
 
சென்னை சத்தியமூர்த்தி பவனின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்ந்து அண்ணாமலை வெறுப்பு அரசியலை செய்து வருகிறார் என்று தெரிவித்தார். எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள் இவரை போல் யாரிடமும் வெறுப்பு, திமிரும், ஆணவமும் இல்லை என்று அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்து கேள்வி எழுப்பும் அண்ணாமலை, பிரதமர் மோடியின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்தும் அப்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேச தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
 
ஒரு வட்டச் செயலாளராக இருப்பதற்கு கூட அண்ணாமலை தகுதி இல்லாதவர் என்றும் அவரை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தார்கள் என்று தெரியவில்லை என்றும் செல்வப்பெருந்தகை விமர்சித்தார். அண்ணாமலை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.


தமிழனாக இருந்தாலும், காவிரி பிரச்சினையில் கன்னட மக்களுக்கு தான் உதவி செய்வேன் என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதை வெளியிட்டால் அரசியலில் இருந்து அவர் வெளியேறி விடுவாரா என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.