விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!
திராவிட மாடலில் கிக் தான் முக்கிய என்று நினைக்கிறார்கள் என்றும் நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள் என்றும் சட்டமன்றத்தில் ஜனநாயகமாக பேசவிடுவதில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார். மேட்டுபாளையம், கோத்தகிரி சாலையில் நீட் எதிரான வாசகங்கள் மற்றும் இந்தியா ஒழிக என்று எழுதி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் கூறினார்.
மேலும் நல்ல தலைவர்கள் தமிழகத்திற்க்கு வர வேண்டும் என நடிகர் விஜய சொன்னதில் எந்த மாற்று கருத்தில்லை என்றும் படித்தவர்களை விட மக்களுக்காக உணர்வு பூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்து இருக்கலாம் என தெரிவித்த வானதி சீனிவாசன், அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார்.
திராவிட மாடலில் கிக் தான் முக்கிய என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக் கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.