வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (15:49 IST)

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை நான் பார்த்து விட்டேன் என்று பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கங்குவா’. இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பின்னணி இசையை முடித்து விட்டதாக சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் விவேக், ’கங்குவா’ படத்தை பார்த்து விட்டதாகவும் அந்த படத்தை பார்த்து மெய் சிலிர்த்தேன் என்றும் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:
 
'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!
இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்!
இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... 
Feeling very proud to be a part of this great film!
 
Edited by Siva