வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (23:44 IST)

கரூர் மாவட்டத்தில் தொடரும் நிருபர் ஒருவரின் அராஜகம் !

ஆங்காங்கே மிரட்டுவதோடு, ஊர் மக்களையே அச்சுறுத்தி வரும் அராஜக நிருபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த ஊர் மக்களே மாவட்ட எஸ்.பி யிடம் கண்ணீர் மல்க ஆதாரத்துடன் மனுக்கள் !

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் செல்ரப்பாளையம் பகுதியை சார்ந்தவர் எஸ்.கண்ணன், கடந்த ஒரிரு ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் (வெளிச்சம் தொலைக்காட்சி) கரூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர் அந்த ஊர் மக்களை அடிக்கடி சுத்தியல் எடுத்துக் கொண்டு மிரட்டுவது சீமெண்ணை ஊற்றுவது என்று பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதோடு, இவரது சார்பில், மூன்று முன்னணி தொலைக்காட்சிகளுக்கும் இவர் தான் செய்திகள் எடுத்துக் கொடுத்து வருவதாகவும் ஆங்காங்கே அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, பெண்களிடம் சில்மிஷம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், கடந்த ஒருரி தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் அவரது உறவினர் வீட்டில் திருமணம் நடக்கும் சமயத்தில் கொரோனா காலத்தில் திருமணம் தேவைதானா ? உடனே கரூர் மாவட்ட எஸ்.பி யிடம் புகார் தெரிவிக்கின்றேன், உங்களது திருமணத்தினை நிறுத்துகின்றேன் என்று கூறி, போலீஸிற்கு போன் செய்து காவல்துறையினையும் டார்ச்சர் செய்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து காவலர்கள் விசாரித்த நிலையில், அப்பகுதி வழியாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செல்லும்., போது கூட்டத்தினை பார்த்து நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்டதற்கு, அங்குள்ள மக்கள், உங்களை எல்லாம் தெரியும், மந்திரியினை இப்போது தான் பார்த்து வருகின்றேன், நான் முதல்வரிடமே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது தான் செல்பி எடுத்துக் கொண்டு வந்ததாகவும் கூறி, பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி பொதுமக்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடமே முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த நிருபர் அங்கிருந்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும் என்று கருதி வாங்கல் போலீஸாரினை அழைத்து செல்லுமாறு உத்திரவிட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடைபெற்ற நிலையில், அன்றிரவு அவரது மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க கெஞ்சிய நிலையில், உடனே அந்த நிருபரை விடுவிக்குமாறு அமைச்சரே உத்திரவிட்டார். இந்நிலையில், அடுத்த நாள், அந்த நிருபர் மாலை பொழுதில் ஒரு வீடியோவினை வெளியிட்டு அதில் என்னை அமைச்சரே தாக்கியதாகவும், அதில் சாதிப்பெயரை சொல்லி தாக்கியதாகவும் அவரே பதிவிட்டு விட்டு, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இந்நிலையில், அந்த பதிவுகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அந்த ஊர் மக்களே அதனை பார்த்த நிலையில், நமக்கு உதவிய அமைச்சருக்கு இந்நிலையா ? என்று கருதி, ஆங்காங்கே அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வாங்கியதோடு, பெண்களை தரக்குறைவாக பேசிய கரூர் மாவட்ட வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்த ஊர் மக்கள் சுமார் 30 குடும்பங்களை சார்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் தனித்தனி மனுக்களாக சுமார் 40 க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தனர். அதில் ஒரு இளஞ்சி என்கின்ற பெண்மணி, கடந்த ஒரிரு வாரங்களுக்கு முன்னர், என்னை சுத்தியலால் தாக்க முற்பட்டார் என்று வீடியோ ஆதாரத்தினையும், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தார். மேலும், மனுக்களை பெற்று கொண்ட கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன், உடனே அந்த மனுக்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து அவருக்கு உரிய தண்டனை பெற்று தருவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில், அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அப்பகுதி பொதுமக்கள் சந்திரமல்லி மற்றும் இளஞ்சி ஆகிய பெண்மணிகள், தினந்தோறும் செல்போனில் மட்டுமே வீடியோக்களை எடுத்து வருவதாகவும் அது தான் செய்தியாக்கி பணம் சம்பாதித்து வருவதாகவும் அங்கு அவர் வைத்தது தான் சட்டம் என்றும் எதற்கெடுத்தாலும் கரூர் எஸ்.பிக்கும், கரூர் கலெக்டருக்கும் போன் செய்வேன் என்று அங்கு மிரட்டி வருவதாகவும், ஏற்கனவே அமைதியாக இருந்தவர், வெளிச்சம் தொலைக்காட்சியில் ஒரிரு வருடங்கள் மாவட்ட நிருபரான பிறகு தான் இது போல, பெரும் அராஜக செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும்,. அவரது செல்போனில் பல வீடியோக்கள் உள்ளதாகவும், அதை வைத்து தான் ஆங்காங்கே மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு தெரிவித்த அவர்கள், நாங்களும் அவரது உறவினர்களே என்றனர்.