செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (17:34 IST)

சென்னையில் ரூ.22 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்: முதல்வர் பழனிசாமி தகவல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு பக்கம் கொரோனா தடுப்பு பணியை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். அவரே பல பிரபல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் முதலீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
இந்த வேண்டுகோளின் அடிப்படையில் ஒரு சில நிறுவனங்கள் சென்னையில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்து இதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன 
 
இந்த நிலையில் இன்று அமெரிக்க நிறுவனம் ஒன்று சென்னையில் டிஜிட்டல் ஹெல்த் திட்டம் ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
இன்று (23.07.2020) "யாதும் ஊரே" திட்டத்தின் மூலமாக அமெரிக்காவின் Plethy நிறுவனம் ரூ.22 கோடி முதலீட்டில் தனது Digital Health திட்டத்தினை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்மூலம் சுமார் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.