திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (22:01 IST)

இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி

அமெரிக்கா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் (இந்திய தொழில் கவுன்சில் கூட்டத்தில் ) கலந்து கொண்ட பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், இந்தியா அதிக வாய்ப்புகள் உள்ளநாடாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து துரிதமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் தொழில் சிறப்பாக வளரவுள்ளதாகவும், வேளாணமை விவசாயத்துறை சிறப்பான வளர்ச்சியடையும் காலகட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் , சுயசார்பு திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் டிஜிட்டல் மயமாக்குதலையும் , 5 ஜி தொழில்நுட்பத்தையும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்து வருவதாகவும், தொழில்நுட்பத்தில் 5 ஜி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் வாய்ப்புகள் உள்ளனவாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.