புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (21:51 IST)

தேசத்தந்தைக்கு காந்தியை விட அம்பேத்கர் தான் பொருத்தமானவர்: பா.ரஞ்சித்

இந்தியாவின் தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்திதான் என சின்னக்குழந்தைகூட சொல்லும். ஆனால் காந்தியை விட தேசத்தின் நன்மைக்காக அதிகம் சிந்தித்தவர் அம்பேத்கர் தான் என்றும், இனி இந்தியாவின் தேசத் தந்தை என்று அம்பேத்கரை தான் குறிப்பிட வேண்டும் என்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சட்டமேதை அம்பேத்கரின் 62வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித்,  பெரும் பணக்காரர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், பட்டம் பெற்றவர்களிடம் மட்டுமே இருந்த ஓட்டு உரிமையை சேரி மக்களுக்கும் பெற்று தந்தவர் அம்பேத்கர். அதன் காரணமாகத் தான் வாக்கு கேட்பதற்காகவாவது சேரிக்குள் அரசியல்வாதிகள் கால் வைக்கிறார்கள். இதுபோன்ற சீர்திருத்தங்கள் செய்ததால் காந்தியை விட அம்பேத்கரை தேசத்தந்தை என்று கூறுவதுதான் பொருத்தமானது என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

பா.ரஞ்சித்தின் கருத்துக்கள், சிந்தனை ஆகியவை அனைத்துமே ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும் என்பதால் அவரை ஜாதி வெறியர் என்றும் நெட்டிசன்கள் கூறுவதுண்டு. உண்மையில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் பொதுவான சட்டத்தை தான் இயற்றினார். ஆனால் அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவினர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடி வருவது வருத்தத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.