தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் ஒரு பொய் பல்கலைக்கழகம்: கடுமையாக தாக்கும் பிரதமர் மோடி
- மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: மெகா கூட்டணிக்கு புதிய திட்டமா?
- ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு: கூட்டணி பேச்சுவார்த்தையா?
- என்னை தோற்கடித்தால் அரசியலில் இருந்து விலக தயார்: ராகுல்காந்திக்கு சாமியார் சவால்
- அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, ஆயுஷ்மானுக்கு 40 ரூபாயா? ராகுல்காந்தி விளாசல்
ராகுல் காந்தி, ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த மாநாடு திடீர் ஒத்திவைப்பு
விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் என்ற மாநாடு டிசம்பர் 10ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பயங்கரவாதத்தை எதிர்த்து நடத்த திட்டமிட்டிருந்த இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், ராகுல்காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக ராகுல்காந்தியும் மு.க.ஸ்டாலினும் உறுதி அளித்திருந்தனர். இந்த கூட்டத்தின் மூலம் திமுக கூட்டணி உள்ள கட்சிகள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாநாடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்த அதே டிசம்பர் 10ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் ஜக்கிய முற்போக்கு கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் காரணமாகவும், டெல்டா பகுதி புயலால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாலும், தேசம் காப்போம் மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாநாட்டை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக இல்லை என சமீபத்தில் துரைமுருகன் தெரிவித்ததன் பின்னணியும் இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாமென அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
